இனவாதிகளைப் பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றிய அரசு இனவாதிகளை கட்டுப்படுத்த ஒரு போதும் சிந்திக்காது என பாணதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டார்.
இலங்கை முஸ்லிம்கள் பூரணமாக ஆதரவளித்து கொண்டுவந்த நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான மிகக் கடுமையாக இனவாத செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு தங்கள் விரல்களை எடுத்து தங்கள் கண்களை குத்திக்கொண்டுள்ளார்கள் என்பதை இனியும் முஸ்லிம்கள் ஏற்காமல் இருக்க முடியாது.
தம்புள்ள பள்ளியில் கழிப்பறை கட்ட முடியாது. நீதிமன்றம் செல்ல வேண்டிய ஞானசார தேரர் அரசாங்ங ராஜதந்திரியைப் போல வெளிநாடு செல்கிறார். பள்ளிகள் தாக்கப்படுகின்றன. இன்னும் ஒருபடி மேல் பள்ளிவாயல்களுக்குள் சீறுநீரும் கழிக் கப்பட்டுள்ளன.மஹிந்த காலத்தில் இப்படி ஏதேனும் நிகழ்ந்து விட் டால் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் துள்ளி குதித்திருப்பா ர்கள்.
ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு அறிவிக்காமல் எங்கும் செல்ல முடியாது என்பதே இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் உள்ள பொதுவான சட்டம். இருப்பினும் அவர் ஜப்பானுக்கு சென்றுள்ளார். எத்தனை தடைகளை தாண்டி இவர் ஜப்பான் சென்றிக்க வேண்டும். விமான நிலையத்துக்கு முக்காட்டை போட்டுக்கொண்டு செ ன்றாரா? அல்லது ஜப்பானுக்கு கள் ள தோனியில் சென்றாரா? நன்றாக சி ந்தித்தால் உயர் அரச அங்கீகாரமி ல்லாமல் இது நடந்தேற வாய்ப்பில் லை.
இதன் மூலம் ஞானசார தேரர் தொடரந்தும் இலங்கையின் நீதியை ஏளனம் செய்தே வருகிறார்.இது மிகத் தவ றான செய்தியை எதிர்கால சந்ததியி னருக்கு கொண்டு சேர்த்துவிடும் என அஞ்சுகிறோம்.யாராவது கழிப் பறை கட்டுவதை தடுப்பார்கள்.