Top News

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'மழையில் நனையும் மனசு' நூல் வெளியீட்டு விழா


தியத்தலாவ எச். எப். ரிஸ்னா எழுதிய 'மழையில் நனையும் மனசு' நூல் வெளியீட்டு விழா 2017 ஆகஸ்ட் 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலை வகித்து, முதற்பிரதியைப் பெற்றுக்கொள்ள இருக்கும் இந்நிகழ்வில் விசேட பிரதிகளை தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் அவர்களும், இப்றாஹிமிய்யா கல்லூரியின் பணிப்பாளர் அல்ஹாஜ் வை.எம். இப்றாஹிம் அவர்களும் பெற்றுக்கொள்வார்கள். 

பாராளுமன்ற உறுப்பினர் மல்லியப்புசந்தி திலகர், கொடைவள்ளல் அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா, கொழும்புப் பல்கலைக்கழக உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், தொழிலதிபர் அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

வரவேற்புரையை கலாபூஷணம் ஸக்கியா சித்தீக்கும், வாழ்த்துரையை ஊடகவியலாளர் விக்கி விக்னேஷும் (சூரியன் எப்.எம்.), சிறப்புரைகளை சட்டத்தரணி என்.எம். சஹீட் மற்றும் அமேசன் கல்லூரி பணிப்பாளர் ஜனாப் இல்ஹாம் மரிக்கார் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளார்கள்.

அறிமுகவுரையை கலாபூஷணம் யாழ். அஸீம் நிகழ்த்த நூலுக்கான நயவுரையை சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் நிகழ்த்துவார். கருத்துரையை தமிழ்த் தென்றல் அலி அக்பர் நிகழ்த்த ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூலாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா வழங்குவார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை திக்வல்லை ஸும்ரி தொகுத்து வழங்கவுள்ளார் என ஏற்பாட்டாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கலை இலக்கியவாதிகள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். 

தகவல் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
Previous Post Next Post