மரம் மண்டியிடாது

NEWS

விழுந்தால் வேரோடுதான்;
மரம் மண்டியிடாது
நிமிர்ந்த தலையும்
நேர்கொண்ட பார்வையும்
நெஞ்சுரமும் கொண்ட மரம் – இது
ஆணவம் களைந்த
அகங்காரம் திறந்த
ஆண்மையுள்ள மரம் – இது
விழுந்தால் வேரோடுதான்;
இந்த மரம் - மண்டியிடாது
ஒற்றை வேரில் -இது
உறுதியாய் நிற்கும் மரம்
பட்டை முற்றிய
பச்சை மரம்
காய்ந்து வற்றி
கருகிய மரமல்ல
காடாய் வளர்ந்து நிற்கும்
கருங்கல்லி மரம்
காற்றுக்கு இது சாயாது
கடுகளவேனும் முறியாது
முட்டினால் மூக்குடையும்
முன்னம் பல்லும் கழன்று விழும்
வெட்டுண்டும்
வீரமே மண்ணில் வீழும்
விண்ணாங்கின் ரகம் – இது
சண்டிக் குதிரைகளை
சந்தித்த மரம்
பண்டிச் சம்பாக்களுக்கா
பயப்படும்?
காட்டு வெள்ளமே
அஞ்சும் மரம்
வெறும் காற்று மழையிலா
கலங்கி நிற்கும்
விழுந்தால் வேரோடுதான்
இந்த மரம்
யாரிடமும் மண்டியிடாது
ஏ.எல். தவம்
18.08.2017
6/grid1/Political
To Top