Top News

சத்தமிடுவது ஏன் : பிரதமர் ரணில்

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான வாதப் பிரதிவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கருத்துரைத்தார்.
சபாநாயகரின் தீர்மானம் கிடைத்ததன் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் செயற்பட முடியும் என்றும் அதற்கு முன்னதாக அவர்கள் இவ்வாறு சத்தமிடுவது ஏன் என்றும் வினவினார்.   
‘முடிவு அறிவிக்கப்படும் என்று நீங்கள் (சபாநாயகர்) கூறினீர்கள். நாம் யாரும் அதற்கு எதிர்ப்பில்லை. அதற்கு மேலும் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இதற்கு மேலும் எதை எதிர்பார்க்கிறார்கள்?’ என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
Previous Post Next Post