இவ்வாண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
நெடுந்தீவு, ஊர்காவற்துறை, நனைனாதீவு ஆகிய தீவுகளிலும் பாரிய பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3 இலட்சத்து 15 ஆயித்து 227 பரீட்சார்த்திகள் இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இதேவேளை, விசேட தேவைகளைக்கொண்ட 260 பேர் இம்முறை பரீட்சைகளுக்கு தோற்றுகின்றனர்.
பரீட்சை நாளை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பரீட்சார்த்திகள் காலை எட்டு மணியளவில் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கான அனுமதி அட்டையுடன் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு என்பனவற்றைக் கொண்டு வருவது அவசியமெனவும் பரீட்சைக்கு சமுகமளிக்க முன்னர் நேர காலத்துடன் அனுமதி அட்டையை பரிசோதனை செய்வதுடன் தாம் விண்ணப்பித்துள்ள பாடம் மற்றும் மொழி, கையெழுத்து உறுதி செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமாயின் அது தொடர்பாக பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் அறிவித்துள்ளார்.