எம்.வை.அமீர்
அரசியல்வாதிகள் இலக்கியத்தை நேசிக்க வேண்டும். மேலும், சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளூராட்சி மன்றம் அமைவதில் எமக்கு எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை, அது அவ்வூர் மக்களினி உரிமை. அதற்கு நாம் ஒரு போதும் தடை இல்லை' என்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்.
கடந்த 26.08.2017 சனியன்று மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் கரவாகு இலக்கியச் சந்தியின் 9 வது அமர்வில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் நினைவரங்கும், நோர்வேயில் வசிக்கும் கோவிலூர் செல்வராஜன் எழுதிய'ஊருக்குத் திரும்பணும்'சிறுகதை நூல் அறிமுகமும்
நடைபெற்றது.
ஊருக்கு திரும்பணும் நூலின் முதற்பிரதியை பிரபல அரசியல் ஆய்வாளர் கல்முனை இப்ராஹிம் பாராளமன்ற உறுப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கவிந்திரன் கோடீஸ்வரன் கலந்து கலந்துகொண்டார்.
மேலும், கலை இலக்கியவாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் நிகழ்விற்கு பிரசன்னமாகி இருந்தனர். கரவாகுச் சந்தியின் 9 வது சந்திப்பில் முதலாவது அமர்வாக நோர்வேயில் வசிக்கும் கோவலூர் செல்வராஜனின் 'ஊருக்குத் திரும்புகிறேன்' சிறுகதை நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, கவிக் கோ அப்துர் ரஹ்மான் நினைவு அரங்கில் அவர் நினைவுகளை உரசும் கவி அரங்கம் சிறப்பாக அமைந்தது. கவிஞர் பாலமுனை பாரூக் அரங்கிற்கு தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கோடீஸ்வரன் உரையாற்றுகையில், இப்படியான இலக்கிய முயற்சிகள் மற்றும் சந்திப்புக்கள் ஊடாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
நிகழ்வில் வரவேற்பும்: எஸ்.ஜனூஸ், தலைவர் கரவாகு கலை இலக்கிய மன்றம்தலைமையுரை: மணிப்புலவர் ஊருக்கு திரும்பணும் நூல் அறிமுகவுரை: திரு. வீ.ரீ. சகாதேவராஜா நூலாய்வு: ஜெஸ்மி எம். மூஸா, இலக்கிய விமர்சகர் கவி வாழ்த்து:அக்கரையூர் அப்துல் குத்தூஸ் ஏற்புரை: கோவிலூர் செல்வராஜன் இரண்டாவது அமர்வு கவியரங்கம்: தலைமை: பாலமுனை பாறூக் பாவேந்தல் கவிஞர்கள் ஏ.பீர். முஹம்மதுஅக்கரையூர் அப்துல் குத்தூஸ் பொறியியலாளர் .தம்பிலெப்பை இஸ்மாயில் எழுகவி ஜெலில்உமர் அலி விஜிலி எம்.ரீ.எம்.யூனூஸ் அப்துல் கரீம் நிகழ்ச்சித் தொகுப்பு: ஏ.எல்.நயீம்அறிவிப்பாளர், இ. ஒ. கூ. பிறை எப்.எம். கரவாகு இலக்கிய சந்தியின் அடுத்த சந்திப்பு பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.
|