Top News

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பாக உயர்மட்டக்குழு ஆராய்வு




சப்னி அஹமட். 


கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை தரமுயர்த்தும் விசேட உயர் மட்டக்ககுழுக்கூட்டம் இன்று (04) சுகாதார, சுதேச வைத்திய அமைச்சின் கொழும்பு காரியாலயத்தில் இடம்பெற்றது. 

இதன் போது, தெஹியத்தக்கண்டி, சம்மாந்துறை, வாழைச்சேனை, மூதூர், கிண்ணியா போன்ற ஆதார வைத்தியசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பாகவும் மத்தியரசின் கீழ் இவ்வைத்தியசாலைகளை ஒப்படைப்பதற்கான சாத்திய வளங்கள் தொடர்பாகவும் ஆராய்யப்பட்டது. 

ஆரயம்பதி, அட்டாளைச்சேனை மற்றும் மஹிலடிதீவு போன்றவற்றின் தரத்தினை மாற்றுவது தொடர்பாகவும் அதற்கான சார்திய வளங்கள் தொடர்பாகவும் உயர் மட்டக்குழினரால் ஆராய்யப்பட்டது. இவ்வைத்தியசாலைகளை தரமுயர்துவதில் கிழக்கு மாகாணக் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அதிக கரிசனையுடன் செயற்பட்டு வருவதுடன் இது தொடர்பாக கிழக்கு மாகாண அமைச்சர்களின் வாரியத்தில் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது. 

இருந்தாலும் இலங்கையில் தற்போது  நெருங்கியுள்ள ஆளனிப்பற்றாக்குறை இருந்த இருந்த போதிலும் இவ்வாரான வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதால் உள்ள நண்மைகள் தீமைகள் தொடர்பாகவும், அதில் உள்ள சாத்திய வளங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஒப்படைக்கப்பட்டு ஆராய்யப்பட்டு அது தொடர்பாக விரிவான தீர்மானத்தினை மேற்கொண்டனர்.

இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்  , மத்தியரசின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,  வைத்தியர்  ஜயசுந்தர பண்டார, மத்தியரசின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருனாகரன், கிழக்கு மாகாண பணிப்பாளர் முருகானந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரவு பொறுப்பாளர் வைத்தியர் ப்ரேம், அம்பாரை, மட்டக்களப்பு, கல்முனை திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும், திட்டமிடல் பிரிவு பொறுப்பாளர்களும் இதன் போது கலந்துகொண்டு தீர்மானங்களை மேற்கொண்டனர். 




Previous Post Next Post