மீன் கடையில் சண்டையிட்டுக் கொள்வது போன்றே ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது காணப்பட்டதாகவும், டீ.எஸ். சேனாநாயக்க ஆரம்பித்த ஐ.தே.கட்சியா இது? தனக்குள் என்னம் தோன்றியதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரிடம் முறையிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக குரல் கொடுப்பது, கூட்டுப் பொறுப்பை மீறும் செயலா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய வளங்களை வெளிநாட்டவருக்கு வாடகைக்கு வழங்குவதும் விற்பனை செய்வதும் ஒன்றுதான் எனவும், தான் தெளிவாகவே நாட்டை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்கவுள்ளதாவும் அவர் மேலும் கூறியுள்ளார்.