Top News

ஷிரந்தி ராஜ­பக் ஷ அழைக்­கப்­பட்­டதை கண்­டித்து இன்று ஆர்ப்­பாட்டம்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­பக் ஷ­விற்கு கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை கண்­டித்து இன்று (15) காலை கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.
மஹ­ர­கமை நகர சபை உறுப்­பினர் காந்தி கொடி­கார தலை­மை­யி­லேயே இந்த ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதனை அர­சியல் பழி­வாங்கல் என சுட்­டிக்­காட்­டியே மேற்­படி ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­க­ப்ப­ட­வுள்­ளது.
அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினை பதவி நீக்­கு­வ­தற்கு கூட்டு எதி­ர­ணி­யினால் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டதன் மறு­தாக்­க­மா­கவே முன்னாள் ஜனா­தி­ப­தியின் பாரியார் இவ்­வாறு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார் என ஆர்ப்­பாட்ட ஒருங்­கி­ணைப்பு குழு அறி­வித்­துள்­ளது. இன்று காலை. 9.00 மணிக்கு ஷிரந்தி ராஜ­பக் ஷ கொழும்பு குற்­ற­ப்பு­ல­னாய்வு பிரிவிற்கு வருகின்ற வேளையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post