முஸ்லிம் விடுதலை இயக்கம் எதிர்வம் உள்ளுராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய மாவட்டங்களில் சுயேச்சையாக தே்தலில் களமிறங்கும் என இயக்கத்தின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
முஸ்லிம் கட்சிகளும் கட்சித் தலைவர்களும் தம்மை தாம் தேசிய தலைவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர், நாட்டில் முஸ்லிம்கள் அல்லல் படும்போதெல்லாம் சொகுசு வாகனங்களில் வலம் வந்தனர், கொசுசு மாளிகைகளில் குடியிருந்தனர், சிங்கள அரசை ஆதரித்தனர்.
அளுத்தகம தொட்டு மூதுார் வரைக்கும் அவர்களின் மௌனம் இருந்தது, காணிகளை இழந்து ஹலால் சான்றிதழை இழநது வடக்கில் மீள் குடியேற்றம் இழந்து தவிக்கும் முஸ்லிம்களை வைத்து பணம் சம்பாதிக்க முயல்கின்றனர், வெளிநாடுகளில் நிகழ்ச்சி நிரலுக்கு செயல்படுகின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு விமோசனம் வேண்டும்.
அடிக்கடி ஊடக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் நாம் நேரடி அரசியலில் களமிறங்குவது என தீரமானிக்கபட்டுள்ளது, இயக்கத்தின் அமீரின் முடிவுக்கு அமைய ஏமாற்று தலைமைகளின் உண்மை முகங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து மக்களை செல்லாக்காசுகள் என்று எண்ணும் கலாச்சாரம் போக்கி அரசியலை சாக்கடையாக கருதும் வரலாறை மாற்றி முஸ்லிம்களுக்கான சரியான பாதை ஒன்றை வழி வகுப்பதே எங்கள் நோக்கு என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.