Top News

”நஞ்சுள்ள உணவுகளால் இலங்கையில் அதிக மரணம்” அதிகாரிகள் முன்வர வேண்டும்

சப்னி அஹமட்- 


அரை நூற்றாண்டு காலமாக அதிக நஞ்சூட்டப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வதால் இலங்கை மக்களாகிய நாம் நோயாளிகளாக்கப்பட்டடுள்ளதோடு பல நோய்களை உள்வாங்கி வருகின்றோம் ஆகவே நஞ்சாக்கப்பட்ட உணவு வகைகளை உள்கொள்வதிலிருந்து தவிர்ந்துகொள்ள அரச அதிகாரிகள் முன்வந்து மக்களுக்கு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

ஆரோக்கியமான. சமூகத்தை கட்டியெழ நிரந்தர தீர்வு"ஹெலசுவய" எனும் தலைப்பில் நேற்று (22) அட்டாளைச்சேநை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய சமூகம் அதிகமாக நஞ்சுள்ள உணவுகளை விருப்பமாக உண்டு வருவதால் கொழுப்புக்கள் படிந்து பாரிஉய நோய் சக்திக்குள் உள்வாங்கு வருகின்றோம், இதற்போதைய காலத்தில் எவ்வாறான உணவுகளை உற்கொள்ள வேண்டும் என்று தெரியது போல் மக்கள் நவீன யுகத்தின் காண்பதை எல்லாம் உள்கொள்வதன் மூலம் பல நோய்களுக்கு உள்ளாக்கப்பாடு அதிக இறப்புக்களை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறன உணவுகளில் இருந்து மக்களை விலக்கிக்கொள்வதான விசேட செயலமர்வுகளை நடாத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.


இலங்கையில் உள்ள மக்கள் தற்போது அதிகமாக நஞ்சு கலக்கப்பட்ட உண்வுகளையே பெரும்பாலும் பாவனை செய்து வருகின்றனர். அதன் மூலம் பாரிய சிக்கல்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். இவ்வாற செயற்பாடுகளை ஆங்கி மருந்துவத்தை விட ஆயுர் வேத மருத்துவம் அதிகமாக நோய்களில் இருந்து பாதுக்காக உதவுகின்றது. 

இவ்வாறன நஞ்சற்ற உணவுகளை உள்கொள்வதில் இருந்து தவிந்து கொள்ள இலங்கை அரசின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமே "ஹெலசுவய"எனும் தலைப்பிலான விசேட செயலமர்வு திட்டம். ஆகவே இதற்காக அரச உத்தியோகத்தர்கள் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காக விசேட திட்டங்களை கையாண்டு நடவடிக்கைகளை மேற்கொளள வேண்டும்.

இந்நிகவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி வைத்திய அலாவுத்தீன, வைத்திய அத்தியட்சகர்கள் உள்ளிட்டவர்களுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.



Previous Post Next Post