யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுள், பிரதான சந்தேக நபர் அடையாள அணிவகுப்பில் இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போதே குறித்த அணிவகுப்பு இடம்பெற்று சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். புங்குடுத்தீவைச் சேர்ந்த செல்வராசா ஜெயந்தன் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் திகதி பொலிஸில் சரணடைந்திருந்தார்.
இந் நிலையிலேயே இன்று நடாத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி, சம்பவ இடத்திற்கு அருகில் தரித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் சாரதிகளால் சம்பவம் தொடர்பாக சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.