கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுங்காயம்

TODAYCEYLON



எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதரயிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுகாயமடைந்த நிலையில் 10.08.2017 அன்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் வெடிப்பு சம்பவம் 10.08.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், சாலி ரொப்ரோ (வயது 24) என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பிரான்ஸ் பிரஜையுடன் பயணஞ் செய்த பெண் ஒருவரும் அதர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி கற்குவாரியில் வைக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததால், பாரிய கல்லொன்று சுமார் 300 மீற்றர் தொலைவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அக்கல்லானது, கற்குவாரிக்கு அருகில் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி நபர் மீது பட்டதால், அவர் காயமடைந்துள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், அருகிலிருந்து தேயிலை தொழிற்சாலை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



6/grid1/Political
To Top