அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
ஹஜ் யாத்ரீகர்களுக்காக சவூதி - கத்தர் எல்லையை சவூதி அரேபிய அரசு திறந்துவிட்டுள்ளது.
கத்தர் மீது பல்வேறு குற்றச்சட்டுகளை சுமத்தி, சவுதி, பக்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கதாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்தன. ஆனால் கத்தார் பிரச்சனைக்கு தீர்வு காண பிற நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் ஹஜ் புனித யாத்திரையை முன்னிட்டு கத்தார் - சவூதி எல்லையை திறந்து சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் உத்தரவிட்டுள்ளார்.