பாட்னா: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து நிற்க யாருமே கிடையாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். லாலு பிரசாத் யாதவுடன் கை கோர்த்து ஆட்சியைப் பிடித்து ஆட்சி செய்து வந்த நிதிஷ் குமார் தற்போது பாஜக ஆதரவுடன் ஆட்சியில் நீடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த லோக்சபா தேர்தலில் மோடியை எதிர்க்க யாருமே இல்லை என்று முழங்கியுள்ளார். மோடியை எதிர்க்கும் வலிமையுடன் யாருமே இல்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராக வருவதை தடுக்கும் வல்லமை யாரிடமும் இல்லை என்றும் கூறியுள்ளார் நிதிஷ்.