Top News

கிழக்கின் வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் உள்ள சிற்றூழியர்கள் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி-கிழக்கு முதல்வர்தெரிவிப்பு



கிழக்கு மாகாணத்தில் உள்ள   சிற்றூழியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வனைப் பெற்றுக்கொடுக்க முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்  அஹமட்  தெரிவித்தார்.

தற்போது  கிழக்கின் பெருமளவான வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் சிற்றூழியர் பற்றாக்குறை தொடர்கின்றமையானது  மக்களுக்கான சேவைகள் சென்றடைவதில் உள்ள தடங்கலாகவே  கருதவேண்டியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

திருகோணமலை  இலங்கை துறைமுகப்பட்டணத்தில் ஆரம்ப வைத்திய சிகிச்சைப் பிரிவுக்கான  அடிக்கல் நாட்டு  நிகழ்வில் பிரதம  அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.

இங்குதொடர்ந்தும்  உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

இன்று எந்த வைத்தியசாலைக்கு சென்றாலும்   எம்மிடம் சிற்றூழியர் பற்றாக்குறை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது,​​
பௌதீக ரீதியான வளங்களை  நாம் கொண்டு சேர்க்கின்றபோதும்  ஆளணிப் பற்றாக்குறையினால் மக்களுக்கு  அபிவிருத்தியின் பயனை  முழமையாக  அனுபவிக்க முடியாமல் போகின்றது.

எனவே  இது தொடர்பான முழுமையான  ஆவணங்களை  நாம் ஜனாதிபதி  மற்றும் பிரதமரிடம் கையளித்துள்ளோம்,
எனவே  சிற்றூழியர்களை  நியமிப்பதற்கான அனுமதியை  நாம் விரைவில் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்.

நாம்  ஆட்சியிலிருந்து  செல்ல முன்னர்  கிழக்கின்  ஆளணி வெற்றிடங்களை  நிரப்பி விட்டு தான்செல்வோம் என்பதை  நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்,

அதனடிப்படையில்  தற்போது  பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை  நிரப்புவதற்காக  நாம் தற்போது  பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளோம்  எனவே  பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி விரைவில் கிழக்கின் ஆசிரியர் பற்றாக்குறையை  நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்,

ஆகவே  நாம் மிகவும் திட்டமிட்ட வகையில்  கிழக்கின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்கின்றோம், பௌதீக மற்றும் ஆளணி  பற்றாக்குறையினை  முழுமையான  வகையில் தீர்ப்பதற்கான முழு திட்டத்தையும் ஏற்கனவே வகுத்து  தற்போது  அவற்றைசெயற்படுத்தி வருகின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

10 மில்லியன் ரூபாசெலவில்   இந்த ஆரம்பவைத்திய சிகிச்சைப் பிரிவு  நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இந்த நிகழ்வில்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர்,கிழக்கு மாகாண கல்விமைச்சர் எஸ் தண்டாயுதபானி உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நாகேஸ்வரன் மற்றும் ஜனார்த்தன்ன்  ஆகியோரும்  இதன்போது  கலந்துகொண்டனர்.
 
Previous Post Next Post