Top News

அரச முஸ்லிம் பாடசாலையிலுள்ள சிங்கள ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி மகஜர்

அரச முஸ்லிம் பாடசாலையின் விடுமுறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தினால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் பாடசாலைகளில் சேவையில் ஈடுபட்டுள்ள சிங்கள ஆசிரியர்கள் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி விடுமுறை வழங்குவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கல்வி அமைச்சு திடீரென 17 ஆம் திகதி விசேட சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அந்த விடுமுறை தினத்தில் மாற்றமொன்றை மேற்கொண்டுள்ளதாக அறிவித்திருந்தது.
முஸ்லிம் சமய அமைப்பொன்றின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் பாடசாலைகளில் சேவை புரியும் சிங்கள ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஏற்கனவே திட்டமிட்ட பிரகாரம் விடுமுறையில் மாற்றங்களைச் செய்வதானால், தங்களை அரச சிங்களப் பாடசாலைகளுக்கே இடமாற்றம் செய்யுமாறும் அவ்வாசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த வேண்டுகோளுடன் சிங்கள ஆசிரியர்களின் கையொப்பத்துடனான மகஜரொன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் தங்களது பிள்ளைகளின் விடுமுறையில் தமக்கு பங்கெடுக்கும் கால அவகாசம் இந்த விடுமுறை மாற்றத்தினால் இழக்கப்படுவதாகவும் அவ்வாசிரியர்கள் அம்மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர்
Previous Post Next Post