ஒரு இளைஞரின் வித்தியாசமான கண்டுபிடிப்பு

TODAYCEYLON

இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தீ குச்சிகளின் உதவியின்றி வாணவேடிக்கையை வான் நோக்கி அனுப்பும் முயற்சியிலேயே அவர் ஈடுபட்டுள்ளார்.
மலிந்த விஜேசேன என்ற இளைஞரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
பழைய பொருட்களின் உதவியுடன் சிறிய கருவிகளை உருவாக்கிய இந்த இளைஞர் கையடக்க தொலைபேசியின் உதவியுடன் இந்த வெடிகளை வான் நோக்கி அனுப்பியுள்ளார்.
இந்த முயற்சியை காணொளியாக பதிவு செய்த இளைஞர் அதனை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதற்கு பலரின் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

6/grid1/Political
To Top