Top News

டெங்கின் பாதிப்பை, இலங்கை மீண்டும் எதிர்கொள்ளுமென்று, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


டெங்கின் பாதிப்பை, இலங்கை மீண்டும் எதிர்கொள்ளுமென்று, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.   
டெங்குத் தொற்றுக் காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக பாரியளவு பாதிப்பை இலங்கை எதிர்கொண்டிருந்த நிலையில், 
மீண்டும் அத்தாக்கத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் எதிர்கொள்ளுமென்று, அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.   
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை, பல மாவட்டங்களிலும் பருவ மழை பெய்யும் என்பதால், டெங்குத் தொற்றின் தாக்கத்தை பல பிரதேசங்களில் எதிர்பார்க்கலாமென்றும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை, 144,052 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் உட்பட 350 பேர் டெங்கினல் உயிரிழந்துள்ளனர். டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்டங்கள் தோறும் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும், டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான காலம் மிக குறுகியதாகவே உள்ளதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதம் முதல் மீண்டும் மழை காலநிலை என்பதால், டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்தே காணப்படும்.
இந்தத் தாக்கத்திலிருந்து மக்களை காப்பதற்காக சுகாதாரத் துறை பாரியளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஜூலை மாதத்திலும் பார்க்க டெங்கு நோயாளர்களின் 15,772 ஆக குறைந்துள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்து ஆலோசகர் டொக்டர் பிரேசிலா சமரவீரா தெரிவித்தார். 





Previous Post Next Post