Top News

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு தற்காலிக பூட்டு


யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடத்தினை இன்று (23)பிற்பகல் தொடக்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தற்காலியமாக மூட யாழ்.பல்கலைக்கழகத்தின் உப வேந்தர்  ரத்னம் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடத்தில் கல்வி பயின்று வந்த விஜயரத்னம் விந்துஷன் (23) என்ற மாணவன் கோண்டாவில் விடுதியில் இருந்த போது டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார். அத்துடன் விஞ்ஞான பீடத்தில் கல்விப் பயிலும் மேலும் 09 மாணவர்கள் டெங்கு நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோய் பரவுவதையடுத்து விஞ்ஞானப் பீடத்தி​​னை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் ஒன்றிணைந்து பீடாதிபதி எம்.குகநாதனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையடுத்து உப வேந்தர்  ரத்னம் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியாடி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பீடாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post