சர்வதேச அளவில் உணவு தட்டுப்பாடு அபாயம் உள்ள நிலையில் காற்று மற்றும் மின்சாரம் மூலம் உணவு பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தில் உள்ள வி.டி.டி. தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம், லபீர்னந்தா தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இச்சாதனை புரிந்துள்ளனர்.
காற்றில் இருந்து கார்பன்டை ஆக்சைடை பிரித்து எடுத்து அதிலிருந்து புரோடீன் பவுடர் தயாரித்துள்ளனர். அதை மனிதர்கள் மற்றும் விலங்குகள் உணவு பொருளாக பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த புரோடீன் பவுடரை மின்சாரத்துடன் சேர்த்து எங்கு பயன்படுத்தினாலும் அது உணவுப் பொருளாக மாறும் மேலும் இதை நிலத்தில் பயன்படுத்துவதன் மூலம் பயிர்கள் செழித்து வளரும். அதிக அளவு மகசூலை கொடுத்து உணவு பொருள் உற்பத்தி பெருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன்டை ஆக்சைடு மற்றும் மின்சாரத்துடன் சேர்ந்து தயாரிக்கப்படும் புரோடீன் பவுடர் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி காய்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பயிர்களின் மகசூலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.