சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்யதிலக குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ரூபா 10,000 காசுப் பிணையிலும் ரூபா 5 இலட்சம் பெறுமதியான 3 சரீரப்பினைகளிலுமே அவர் விடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு மாணவத்தலைவராக லஹிரு வீரசேகர ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி பிணை காலப்பகுதியில் தேவையற்ற விடயங்களில் ஈடுபட்டால் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைப்பதாதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, லஹிரு வீரசேகர தொடர்பில் வெவ்வேறு நீதிமன்றங்களில் சுமார் 10 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும் 2011ம் ஆண்டு 3 வருட பாடநெறிக்காக லஹிரு வீரசேகர பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் 6 வருடங்கள் கடந்தும் இன்னும் அவர் அதனை பூர்த்தி செய்யவில்லை எனவும் மன்றில் ஆஜராகியிருந்த அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.