சவுதி அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம் ஹஜ் கடமைக்காக சவுதி செல்லும் தமது மக்கள் தொடர்பில் அச்சம் நிலவுவதாக கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் மொஹம்த் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.
சவுதி எல்லையை திறந்து தமது மக்களுக்கு ஹஜ் கடமைக்காக மக்கா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக இதுவரையில் சவுதி எந்தவித அறிவிப்பையும் விடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நோர்வேயிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் சவுதி அனுமதி குறித்து வினவிய போதே இதனைக் கூறியுள்ளார்.
சவுதியுடனான கட்டார் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஹஜ்ஜுக்காக அனுமதி வழங்கப்பட்டாலும், கட்டார் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் எதுவும் அளிக்கப்படாமையானது ஒரு பிரச்சினையாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.