(க.கிஷாந்தன்)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாட்டு மக்களுக்கு கடந்த கால அரசாங்கத்தை விட தற்பொழுது முன்னூதரணமாக செயற்படுவதாக என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார் .
அட்டனில் 18.08.2017 இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சியில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராபட்ச ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக மக்களுக்கு சேவையாற்றினார். இதனால் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக பாராளுமன்றம் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கு முடியாமல் போயிருந்தது.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நாட்டின் தலைமை பொறுப்பையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பையும் ஏற்று இருப்பதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் சேவைகளை செய்யக்கூடிய வாய்ப்புகள் எமக்கு கிடைத்துள்ளது.
கடந்த கால ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயற்பட்ட போது ஆங்கே இனவெறி தன்மை காணப்பட்டது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் இனவெறியர்களுக்கு இடமில்லாமல் போயுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக தமிழ் பிரதிநிதிதுவத்தை உள்ளுராட்சி சபைகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு அதிகரிக்க இன்றைய ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் வலுவடைய பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயல்பாடுகளை மக்கள் விரும்பதக்க கூடிய வகையில் காணப்படுகின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல பல சேகைளை மக்களுக்கு முன்னெடுத்து செல்லும் வாய்ப்பினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்பொழுது உருவாகியுள்ளது என்றார்.