வடக்கில் அடிக்கடி இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
எல்.ரி.ரி.ஈ. தோற்கடிக்கப்பட்டு யுத்தம் நிறைவடைந்தவுடன் புலம்பெயர் புலிகள் அமைப்புக்கு கிடைத்து வந்த நிதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் புலம்பெயர் புலிகள் அமைப்புக்கு தமிழ் மக்கள் நிதி வழங்குவதை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலைமையை மாற்றுவதற்கு வடக்கில் மீண்டும் வன்முறையை ஏற்படுத்த புலம்பெயர் புலிகள் முயற்சித்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக வடக்கில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பின்னர், புலம்பெயர் புலிகள் அமைப்புக்கு கிடைத்து வந்த நிதி பெரும் அதிகரிப்பை எட்டியுள்ளதாக வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பற்றாளர்கள் பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வடக்கில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்குப் பின்னால், முன்னாள் புலி உறுப்பினர்கள் காணப்படுவதாகவும் பாதுகாப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.