ஏறாவூரில் கைக்குண்டு மீட்பு

TODAYCEYLON
பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபை முன்னாள் உறுப்பினர் ஒருவரின் காணியிலிருந்து, நேற்று  (14) மாலை கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் நகரசபை முன்னாள் உறுப்பினர் எம்.முஸ்தபாவின் காணியில் இருந்த பப்பாசி மரமொன்றை அகற்ற முற்பட்ட வேளை, சுமார் 2 அடி ஆழத்தில் குறித்த கைக்குண்டு, பிளாஸ்டிக் போத்தலொன்றில் உட்புகுத்தப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவம் தொடர்காப ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஏறாவூர் பொலிஸார், கைக்குண்டைச் செயலிழக்கச் செய்ய நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.
6/grid1/Political
To Top