வாத விவாதங்களின் போது, மீண்டுமொரு தடவை எழுந்து கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நம்பிக்கையில்லா பிரேரணையில் அடங்கியுள்ள வார்த்தைகள் தொடர்பில் முன்வைக்கப்படக் கூடிய திருத்தங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து முடிவொன்றை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
எனினும், அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட விமல் வீரவன்ச எம்.பி, இது அங்கொட அல்ல, நாடாளுமன்றம் என்பனை பிரதமருக்கு நினைவுபடுத்துங்கள் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.