புத்தரை அவமதிக்கின்ற வகையில் சில வாசகங்களைப் பதிவேற்றம் செய்தார் என்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர் நேற்று (23) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
88 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன் மீதான வழக்கை தண்டனை சட்ட கோவை 291 இன் கீழ் மீள் பதிவு செய்ததை தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் கடுகண்ணாவை பொலிஸாரால் குறித்த இளைஞனுக்கு எதிராக பிழையான முறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததாக குறித்த இளைஞன் சார்பில் ஆஜரான RRT அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் வேண்டுகோளின் பிரகாரம், சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின் தலைமையிலான ஆர்.ஆர்.டி அமைப்பு குறித்த இளைஞன் சார்பில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.