குறித்த பள்ளிவாயல் மையவாடி புனரமைப்புக்கென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்நசீர் அஹமட் 18 இலட்ச ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
மையவாடி புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கிழக்கு முதலமைச்சர்ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் கடந்த வௌ்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையின் பின்னர்ஆரம்பித்து வைக்கப்பட்டது,
மழைகாலங்களில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கிவந்தகாவத்தமுனை அல்-முபாரக் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரும் பொதுமக்களும் கௌரவமுதலமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த நிதியானது ஒதுக்கீடுசெய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மையவாடியின் ஒரு பகுதியானது மண்ணிட்டு_நிரப்பப்பட்டு_மழைகா லத்தில்_எவ்வித_சிரமும்_இல்லா மல்_ஜனாசாக்களை_அடக்கம்_செய் வதற்கு_ஏதுவான_வகையில்_புனரமைக் கப்படும்.
கௌரவ முதலமைச்சர், மற்றும் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் ஷிப்லிபாறூக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தனர்.
நீண்டகாலமாக குறித்த பள்ளிவாயல் நிருவாகத்தினரும், பிரதேச மக்களும் எதிர்நோக்கிவந்தபாரியதொரு பிரச்சினைக்கு கிழக்குமாகாண முதலமைச்சரின் ஊடாக நிரந்தரத் தீர்வுகிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.