இறக்குமதி சீனிக்கான வரி அதிகரிப்பு

TODAYCEYLON
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட இறக்குமதி வரி 08 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை (16) நள்ளிரவு 12.00 மணிமுதல் இந்த வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.
அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள 10 ரூபாய் வரி 18 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த வரி அதிகரிப்பால் சந்தையில் சீனியின் விலையில் மாற்றம் ஏற்பட மாட்டாது என சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top