நல்லாட்சி அரசு ரவியின் இராஜினாமாவால் இழந்த மரியாதையை ஷிரந்தியினூடாக பெற
முனைந்துள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஊடக பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
இவ்வரசு ரவி கருணாநாயக்க மூலமாக மிகப் பெரும் அவமானத்தை சந்தித்துள்ளது.இதன் மூலம் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினர் மிகப் பெரும் பலம் பெற்றுள்ளனர்.இந்த பலத்தை உடைக்கஅவர்களையும் கள்வர்களாக, கொலைகாரர்களாக காட்ட வேண்டிய தேவை உள்ளது.
இதனடிப்படையில் ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்த நாளே ஷிரந்தி ராஜபக்ஸவை விசாரணைக்குஅழைக்கும் கதைகள் மிக வேகமாக பரவியதை அவதானித்தாலே இதன் உள் நோக்கத்தை மிக இலகுவாகஅறிந்து கொள்ளலாம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தில் ஷிரந்தி ராஜபக்ஸவுக்கு அதிக கௌரவம்வழங்கப்படுகிறது.அவரை விசாரணைக்கு அழைப்பதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிக்கு எழுந்த மக்கள்செல்வாக்கை குறைப்பதும் அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும் இவ்வாட்சியாளர்களின்திட்டமாக இருக்கலாம்.ஒரு பெண்னை வைத்து அரசியல் செய்யும் இழி நிலைக்கு இவ்வாட்சியாளர்கள்சென்றுவிட்டார்கள். இதன் மூலம் இவ்வாட்சியாளர்கள் தங்களது ஆட்சி நீடிக்க எதனையும் செய்யதயங்கமாட்டார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
மனைவியை விசாரணைக்கு அழைத்ததும் அஞ்சுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒன்றும்நலிந்த ஒருவரல்ல. அவர் இலங்கையில் நிலவிய கொடிய யுத்தத்தை வென்ற மாவீரனல்லவா? ரவிகருணாநாயக்க போன்று மனைவி மாட்டிக்கொள்ள " ஐ டோன்ட் நோ " சொல்லி விலகுபவருமல்ல. மனைவியின் விசாரணை முடியும் வரை நின்று அழைத்தும் வந்திருந்தார்.
தற்போதெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள்அவர்களுக்கே ஆப்பாகின்றன. ஷிரந்தி ராஜபக்ஸ CID யில் ஆஜராகியதை தொடர்ந்து அங்குஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.அங்கு குழுமியிருந்த மக்கள் வெள்ளத்தை கண்டேஇவ்வாட்சியாளர்கள் மதி கலங்கி போய் இருப்பார்கள். இதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவின் செல்வாக்கை வெளிக்காட்ட அவருக்கு கிடைத்த சந்தர்ப்பமாகவும் நோக்கலாம் என அவரதுஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.