இந்திய மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவலிங்க பூஜை செய்ய மறுத்த முஸ்லிம் மாணவிகளை வகுப்பறைக்குள் பூட்டிவைத்து கைதிகள் போல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போபால் கமலா நேரு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிவலிங்க பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்
மாணவிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று பாடசாலை முதல்வர் நிஷா கமரானி கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அங்கு பயிலும் சுமார் 100 முஸ்லிம் மாணவிகள் இதுபோன்ற பூஜை செய்வது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது என்பதால் அதை செய்யமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இதனால் முஸ்லிம் மாணவிகள் அனைவரும் வகுப்பறைக்குள் கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத பாடசாலை ஆசிரியை தெரிவிக்கையில், "மத்திய பிரதேசத்தில் சில தனியார் பாடசாலையில் இதுபோன்ற பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனால் அனைத்து மதத்தினரும் பயிலும் அரசு பாடசாலைகளில் இதுபோன்ற ஒரு சார்பு மத பூஜைகள் நடத்தப்படுவது மாணவர்களுக்கிடையே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்" என்றார்.
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்