பிறைந்துரைச்சேனை 206-C கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள வீதியில் சிரமதான நடவடிக்கைகள் இன்று காலை 6மணிமுதல் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வீதியை கல்குடா முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அநேகமானோர் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நாட்களில் இவ்வீதியின் ஓரமாக வளர்ந்து காணப்பட்ட பற்றைகள்,கொடிகள்,மரங்கள் என்பவற்றினால் மக்கள் பல அசெளகரியங்களை எதிர்கொண்டமையை காணக்கூடியதாக இருந்தது. இதனை அவதானித்த பிறைந்துரைச்சேனை 206-C கிராம அபிவிருத்திச் சங்கம் அதன் தலைவர்M.ஆப்தீன் தலைமையில் சுமார் 30 இற்கு மேற்பட்ட கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் சிரமதானப் பணிகளில் கலந்து கொண்டார்கள்.
குறித்த கழிவுகளை வாழைச்சேனை பிரதேச சபையின் குப்பை சேகரிக்கும் இயந்திரங்களைக் கொண்டு அகற்றியமை குறிப்பிடத்தக்கது. குறித்த இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை வைத்தியசாலை அத்தியட்சகர் Dr.மதன் நிருவாக உத்தியோகத்தர் பாறூக் (LLB) ஆகியோர் குறித்த செயற்பாட்டுக்காக தங்களது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததுடன் குளிர்பான ஏற்பாடுகளையும் செய்து தந்தனர்.
இப்பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சகோதரர் நூர்தீன் அவர்கள் முழுமையாக கலந்து கொண்டு தனது பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.