பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் வீதிவிதிமுறைகளை மீறும் சாரதிகள் மற்றும் வேறு தவறுகளைப் புரிவோரை, இலகுவாக இனங்கண்டு தண்டனை வழங்கும் வகையில், பொலிஸாருக்கு வழங்கப்படும் புதிய மோட்டார் சைக்கிள்களில், கமெராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாடு பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஈ.எம் பியரத்ன தெரிவித்துள்ளார்.