இறந்த தந்தையிடம் ஆசி கேட்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதச் சென்ற சிறுமி!

TODAYCEYLON
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இறந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் இருக்க சடலத்தின் முன்நின்று ஆசிகேட்டு சிறுமியொருவர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதச் சென்றுள்ளார்.

இவ்வாறான  சோகமயமான சம்பவமொன்று நேற்று  எம்பிலிப்பிட் டிய விகாரகல பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

புற்று நோய் காரணமாக சிறுமியின் தந்தை கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.  சிறுமியின் தந்தை இறந்து இரண்டு நாளாகையால் நேற்றும் உறவினர்கள் கிராம மக்களின் அஞ்சலிக்காக சடலம் வீட்டில் வைக்கப்பட்டி ருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் காலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. இப்பரீட்சையை இச்சிறுமி  எழுத வேண்டியிருந்தது.

உரிய நேரம் வந்ததும் பரீட்சைக்கு செல்ல  தாயாரான சிறுமி தனது தாயின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றுக்கொண்டார்.

அதன் பின் தந்தையின் சடலத்துக்கு அருகில் சென்ற சிறுமி  "தந்தையே சென்று வருகிறேன்" எனக் கூறி கண்ணீருடன் ஆசி கேட்ட போது அங்கிருந்த அனைவர்  கண்களிலும் நீர் கசிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
6/grid1/Political
To Top