Top News

முஸ்லிம் அமைச்­சர்­களில், நம்­பிக்கை இழந்­து­விட்டோம்

-ஏ.ஆர்.எ.பாரில்-

தம்புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் முஸ்லிம் அமைச்­சர்கள் தாம­த­மின்றி தீர்­வுகள் பெற்றுத் தரு­வ­தாக பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்தும் எதுவும் நடை­பெ­ற­வில்லை. அவர்கள் எம்மைத் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அதனால் நாம் முஸ்லிம் அமைச்­சர்­களில் நம்­பிக்கை இழந்­து­விட்டோம் என  தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம். சலீம்தீன் தெரிவித்தார்.


தம்­புள்ளை பள்­ளி­வாசல் தற்­போது 41.5 பேர்ச் காணியில் அமைந்துள்ளது. எனவே பள்ளிவாசலுக்கு 41.5 பேர்ச் காணி வழங்கப்படுவதுடன் பள்ளிவாசலுக்கு அருகில் வாழும் 27 சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கும் மாற்றிடங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை வரு­டக்­க­ணக்கில் தீர்க்­கப்­ப­டா­துள்ள தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் ஜனா­தி­பதி தலை­யிட்டு தீர்வு பெற்றுத் தரு­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார். இது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்­சு­வார்த்தை அடுத்த வாரம் நடை­பெ­ற­வுள்­ளது என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி தெரி­வித்தார்.
தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­கள் ­தொ­டர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.


அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், தேசிய ஐக்­கிய முன்­னணி தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வுடன் கடந்த வாரம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளது. ஜனா­தி­ப­தி­யையும் சந்­தித்து இவ்­வி­வ­காரம் தொடர்­பாக தெரி­வித்­த­தை­ய­டுத்து அவர் இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு பெற்­றுத்­த­ரு­வ­தாக உறு­தி­ய­ளித்­த­துடன் அடுத்த வாரம் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை ஏற்­பாடு செய்­யு­மாறு அவ­ரது செய­லா­ளரைப் பணித்­துள்ளார்.



மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் தம்­புள்ளை பள்­ளி­வா­சலை இடம் மாற்றிக் கொள்­ளு­மாறும் அதற்கு 80 பேர்ச் காணி வழங்­கு­வ­தா­கவும் கூறப்­பட்­டது. பள்­ளி­வா­சலை அர­சாங்­கமே நிர்­மா­ணித்துத் தரு­வ­தா­கவும் கூறி­யது. ஆனால் அவ்­வாறு நடக்­க­வில்லை.



இந்த அர­சாங்கம் 80 பேர்ச் காணி தர முடி­யா­தென்றும் பள்­ளி­வா­ச­லுக்கு தற்­போ­துள்ள நிலப்­ப­ரப்பு வழங்­கப்­ப­டு­மென்று உறு­தி­ய­ளித்­தாலும் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. பள்­ளி­வா­சலின் 41.5 பேர்ச் காணிக்குப் பதி­லாக 20 பேர்ச் காணியே வழங்க முடியும் என நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது. என்­றாலும் அந்த 20 பேர்ச் காணி வழங்­கு­வதும் இழு­ப­றியில் இருக்­கி­றது. இது பற்றி ஜனா­தி­ப­தி­யிடம் விளக்­கி­யி­ருக்­கிறோம் என்றார்.
Previous Post Next Post