ஜுலம்பிட்டியே மங்கள தேரரின் நூல் வெளியீட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரும் சந்தித்துக்கொண்டிருந்தனர்.
இதன் போது இரா சம்பந்தன் ஐயா அவர்கள் " பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக்கொள்ள நானும் நீங்களும்இணைந்து ஆட்சி செய்ய வேண்டுமென" கூறியுள்ளார்.
இந்த ஆட்சியை கொண்டுவருவதில் மிக நீண்ட திட்டங்களோடு தமிழ் தேசிய கூட்டமைப்புசெயற்பட்டிருந்தது. மைத்திரியை கொண்டு வருவதிலும் இவர் பிரத பங்காரியவராக குறிப்பிடாப்படுகிறது. இப்படியானவர் இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துவது சாதாரணமாக எடை போடக் கூடியதல்ல.
அது மாத்திரமல்ல. இன்று தமிழ் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ மீது யுத்த ஒழிப்பின்போது எழுந்த தப்பபிப்பிராயம் காரணமாக மிகவும் அதிருப்தியில் காணப்படுகின்றனர் ( தற்போது தமிழ்மக்கள் உண்மைகளை அறிந்துவருகின்றனர்). இவ்வாறான நிலையில் இத்தகைய வார்த்தைகள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு பொருத்தமானதல்ல.இப்படியான நிலையிலும் இரா சம்பந்தன் ஐயா அவர்கள் இப்படிகூறுகிறார் என்றால் அவருக்கு எப்படி கைத்திருக்கும்.
இப்போது இரா சம்பந்தன் ஐயா உண்மையை உணர்ந்ததன் வெளிப்பாடே இவ்வாறான வார்த்தைப்பிரயோகமாகும். இவ்வாட்சியை நிறுவுவதில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிக அதிகமான பங்களிப்பை வளங்கிஇருந்தனர். அவர்கள் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றிக்கு சவாலாக அமைவார்கள் எனநம்பப்பட்டது. அவர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரித்தால் இவ்வாட்சியை மிக இலகுவாகவிரட்டி விடலாம்.
அ அஹமட்-