தங்கம் கடத்திய இந்தியர்கள் கைது

TODAYCEYLON
உடலில் மறைத்து வைத்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களிடமிருந்து 117 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 32,43 மற்றும் 53 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. அவர்களிடம் சுங்கப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6/grid1/Political
To Top