பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை தேயிலையின் (சிலோன் ரீ ) 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற சர்வதேச தேயிலை சம்மேளனத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேயிலை கைத்தொழில் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாகும். சுமார் 150 வருடங்களுக்கு முன்பு கோப்பி பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட கடுமையான நோய் தாக்கத்தினால் அது அழிந்தது. இதன்போது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேயிலையின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக தேயிலை ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்பை பெறுவதில் நாம் அதிக சவால்களை எதிர்கொண்டிருந்தோம்.
ஆனால் இலங்கை தேயிலையின் தரம் மற்றும் அதன் பெறுமதியை உணர்ந்து சர்வதேச நாடுகள் பலமான அங்கீகாரத்தை வழங்கின. தற்போது உலக மயமாக்கல் மற்றும் சந்தைப்படுத்தல் ரீதியான சவால்களுக்கு நாம் முகம்கொடுத்து வருகின் றோம். இதனை எதிர்கொள்ள சிறு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது அவசியமாகும். அதற்கான பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 1995 இலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை இலங்கையின் தேயிலை உற்பத்தி இருமடங்காகியுள்ளது.
ஆனால் குறித்த இலக்கை அடைவதற்கான கால இடைவெளி அதிகமானதாகும். நாம் பல சாதனைகளை அடைந்துள்ளோம். 2015 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி 43 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் 34 வீத வளர்ச்சியை அடைந்திருந்தது. ஆனால் தேயிலை தொழில் மொத்த உற்பத்தியில் வீழ்ச்சியடைந்து வருகின்றது என்பது உண்மையேயாகும். அதற்கான காரணங்களை கண்டறியவுள்ளோம்.
இந்தியா, சீனா போன்ற நாடுகள் தேயிலைக்கான மொத்த சந்தையை பிடித்து வைத்துள்ளன. நாம் இதனை தாண்டி பல சர்வதேச விநியோகத்தில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும். ஐக்கிய அமெரிக்கா இலங்கையின் பிரதான கொள்வனவு நாடாக உள்ளது. இதனை போன்று தமது தேவைக்கான சந்தை வாய்ப்பை மத்திய கிழக்கு நாடுகளில் விஸ்தரிக்க வேண்டும்.
உலக சனத்தொகையில் 2050 ஆம் ஆண்டு மேலும் இரண்டு பில்லியன் சனத்தொகை அதிகமாகும். குறிப்பாக இந்தியாவிலிருந்து இந்தோனேசியா வரையான பகுதிகளே சனத்தொகை வளர்ச்சியில் அதிகமாகும். குறித்த பிராந்தியத்துக்கான சந்தை வாய்ப்பை விஸ்தரிக்க வேண்டும். 2050 ஆண்டாகும் போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக இருப்பர். அவ்வாறிருக்கும் போது நமது வாழ்க்கை முறை முற்றி லும் மாற்றமடைந்து தொழில்நுட்ப ரீதியிலான மாற்றம் பெற்றிருக்கும். இந்த மாற்றத்துக்கமைவாக நம்மை மாற்றிக்கொண்டால் மாத்திரமே நாம் உயிர் வாழ முடியும். அந்நேரத்தில் நமது உணவு பழக்க வழக்கம் உட்பட அனைத்தும் தொழில்நுட்ப ரீதியான சவாலுக்கு உட பட்ட விடயங்களாக இருக்கும். இவற் றையெல்லாம் சமாளித்து நம்மை ஆக்கிரமித்து கொண்டால் மாத்திரமே நம க்கு எதிர்காலம் இருக்கும்.
தேயிலை கைத்தொழிலை பொறுத்தமட்டில் எம் மிடம் தேவையானளவு விஸ்தரிப்பதற்கான இடவசதியுள்ளது. சந்தைப்படுத்தலில்தான் பிரச்சினையுள்ளது. பதுளை கைத்தொழில் பேட்டை, அம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டையுடன் போட்டிபோட வேண்டும். நாம் கொழும்பு பங்குச் சந்தையை மாத்திரம் நம்பியிருக் கக் கூடாது உலக சந்தையை நோக்கி பயணிக்க வேண்டும்.
மலையகத்தின் லயன் வீடு முறையை மாற்றி தற்போது தனி வீட்டுத்திட்டங் கள் அமைக்கப்படுகின்றன. இது தொட ர்ந்தும் முன்னெடுக்கப்படும். அவர்களது வாழ்க்கை முறை மாற்றம்பெறும். சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் பெருந்தோட் டத்துறை மாற்றியமைக்கப்படும் அதுமட் டுமல்லாது பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளை ஒழுங்கமைத்து சட்டமூலம் ஒன்றை கொண்டு வருவதற்கும் எதிர் பார்த்துள்ளோம். இதன்மூலம் பாராளு மன்றத்துக்கு அதன் செயற்பாடுகள், அதன் கடமைகளை கண்காணிப்பதற்கு வழி ஏற்படும் என்றார்.