Top News

சாய்ந்தமருது தோணாவின் அவலத்தை அமைச்சர் ஹக்கீம் கவனத்திலெடுப்பாரா


எம்.வை.அமீர் 

பாராளமன்றம் வரைப்பேசப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் கோலாகலமாக பணிகள் ஆரம்பமாகி இடைநடுவே விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் கேட்கப்படுகின்றன.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் நாடுமுழுவதும் துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இப்போதைய சூழலில் சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி மட்டும் ஆரம்பித்த கையோடு நிறுத்தக்ப்பட்டுள்ளது ஏன்? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் இந்த தோணாவின் அபிவிருத்தியும் உள்ளடங்கும்.

 அதிகபட்ச வாக்களித்த சாய்ந்தமருது மக்களின் எதிர்பார்ப்புகள் எப்போது நிறைவேறும்?
சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தித் திட்டங்களை யார் கண்காணிப்பது? இது விடயாமாக யாரிடம் கேட்பது? வேலைத்திட்டத்தின் தட்போதயநிலை என்ன? இதுவரை எவ்வாளவு செலவிடப்பட்டுள்ளது? ஏனைய வேலைகள் எப்போது ஆரம்பிக்கும்? இவ்வாறான பலகேள்விகள் மக்கள் மத்தியில் கேட்க்கப்படுகின்றன. 

தோணா அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் கொள்ளையிடப்படுவதாகவும் தேர்தல் ஒன்று வரும்போது மட்டும்தான் இதன் அபிவிருத்தி பற்றி பேசப்படுவதாகவும் கதைகள் உலவுகின்றன. குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் றவூப் ஹக்கீம் பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கின்றன.

அமைச்சர் றவூப் ஹக்கீமால் சாய்ந்தமருதுக்கு அதிகமான நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் இடம்பெறுவதாக கூறப்படுத்தப்படுகின்ற போதிலும் அவைகள் மக்கள் மயப்படுத்தப்படவில்லை என்ற குறையும் இருக்கின்றது. இவைகளை மக்கள்மயப்படுத்துவது யார்?
இடைநிறுத்தப்பட்டுள்ள  தோணா அபிவிருத்திப்பணியில் பூரணப்படுத்தப்படாத சில இடங்களில் குப்பைகளை இட்டு தீயிடப்பட்டுள்ளதால் அந்த இடம் சிதைந்த நிலையில் இருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

 பல மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படும் குறித்த திட்டம் வீணடிக்கப்படாமல் மக்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதாக அமையவேண்டும்.
எதிர்காலத்திலும் சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தியானது  தேர்தல் பேசுபொருளாக ஆகாது தோணாவை அபிவிருத்தி செய்துள்ளோம் என கூறும் அளவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான  றவூப் ஹக்கிம் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோர் செயற்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Previous Post Next Post