(எம்.ஜே.எம்.சஜீத்)
தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”தேசிய காங்கிரசின் தெளிவான பாதை” மாபெரும் பொதுக்கூட்டம் எதிர்வரும் (19) சனிக்கிழமை பி.ப. 5.30மணிக்கு அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம்பெறவுள்ளது.
தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தேசிய காங்கிரசின் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றவுள்ளார்.
இதன்போது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.