பாறுக் ஷிஹான்
பரச்சேரி பிரதேச காணிகளில் மீண்டும் முஸ்லீம்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி யாழ் முஸ்லீம் மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
கடந்த(13) யாழ்ப்பாணம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ்.எம் சுபியான் குறித்த பிரதேசத்தில் யாழ் முஸ்லீம் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் அதற்கு தடையாக உள்ள அனைத்து விடயங்களும் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனடிப்படையில் இக்கூட்டத்தில் இணைத் தலைவர்களாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் ஒப்புதல் வழங்கியதுடன் பிரதேச செயலாளரை இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணித்தனர்.
இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த மௌலவி சுபியான் கடந்த காலங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த யாழ் முஸ்லீம்கள் ஏற்கனவே குடியேறி வாழ்ந்த பிரதேமாக பரச்சேரி பிரதேசம் உள்ளது.
இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியமர தற்போது விருப்பம் தெரிவித்துள்ளனர்.ஆனால் அவ்விடத்தில் விவசாய செய்யும் காணி என கூறி விவசாய அமைப்புகள்இஅது சார்ந்த சம்மேளனங்கள் மக்களை மீளக்குடியேற விடாமல் தடுத்து வருகின்றன.
இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்ததை அடுத்து அங்கு சென்று பார்வையிட்டேன்.மக்கள் பக்கம் தான் நியாயமான காரணங்கள் உள்ளன.அதனை அடுத்து இக்காணி மீளவும் அம்மக்களுக்கு கிடைப்பதற்கு நான் சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடியுள்ளேன்.
ஆனால் பரச்சை வெளிக்காணி நெற்பரப்புக் காணியாக உறுதியில்பதிவுள்ளதால் கட்டிட வேலைக்கான அனுமதியை யாழ் மாவட்ட விவசாயத் திணைக்களம் தருவதற்குமறுக்கின்றது.எனவே இக்காணியில் உள்ளவர்களுக்கு வீடு கட்டுவதற்கு வீட்டுத்திட்டம் பெறுவதற்குமுடியாதுள்ளது. யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களுக்கான அனைத்து வசதிகளையும் அது தொடர்பிலான எதிர்பார்ப்புக்களையும் ஏன் வீணடிக்க சில தரப்பு முயற்சிக்கின்றது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என ஆக்ரோசமாக தனது கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.