கிழக்கு மாகாண சுகாதார அமைசின் கீழ் உள்ள சுதேச திணைக்களத்தினை அபிவிருத்தி செய்யும்நோக்கில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தலைமையில் விசேடகூட்டமொன்று நேற்று (16) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திருகோணமலைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது, கிழக்கு மாகாண சுதேசத்துறைக்கு குறைந்தளவிலான நிதி ஒதுக்கப்பட்ட நிலையில்சில வைத்தியசாலை அபிவிருத்திகள் தொடர்பில் நிதி கையாள்கையில் உள்ள சிக்கல்தொடர்பாகவும், சுதேசத்துறையில் குறைந்துள்ள மருந்தக பிரச்சினை தொடர்பாகவும் அதற்கெனகிழக்கு மாகாணத்தில் உள்ள 03 மருந்து தயாரிப்பு நிலையங்களில் உள்ள பிரச்சினைகள்தொடர்பாகவும். இன்னும் மருந்தகங்கள் அமைப்பது தொடர்பாகவும், சுதேசத்துறையில் ஆளனிஊக்குவிப்பு தொடர்பகவும் அவர்களுக்கான மேலதிக ஊக்குவிப்புக்களில் உள்ள இடர்பாடுகள்தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கட்டாயம் பயிற்ச்சி செயலமர்வுமேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அடுத்த மாகாண சபை பட்ஜட்டில் சுதேச திணைக்களத்திற்குநிதியை அதிகரிக்க மாகாண பட்ஜட் பிரிவிக்கான பணிப்பாளரிடம் அமைச்சரினால் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்ட பொத்துவில், கோமாரி,பாண்டிருப்பு, மன்டூர் போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்ட மத்திய மருந்தகத்தினை திறந்துமக்கள் பாவனைக்கு திறந்து வைப்பது தொடர்பாகவும் ஆராய்யப்பட்டது.
இதன் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாகாண திறைசேரிபணிப்பாளர்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர், கிழக்கு மாகாண சுதேசதிணைக்கள மாகாணப் பணிப்பாளர், மாகாண சுதேச திணைக்கள் வைத்திய அத்தியட்சர்கள்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.