Top News

இலங்கை கடற்படையிடம் யுத்தக் கப்பல் இன்று ஒப்படைப்பு


இலங்கைக் கடற்படைக்காக, இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட அதிதொழில்நுட்பத்துடன் கூடிய ஆழ்கடல் கண்காணிப்பில் ஈடுபடும் முதலாவது கப்பல், உத்தியோகபூர்வமான முறையில், கடற்படையிடம், இன்று (02) ஒப்படைக்கப்படவுள்ளது.  
இந்த வைபவம், கொழும்பு துறைமுகத்தில், கிழக்கு கொள்கலன் யார்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், இன்று மாலை நடைபெறும்.  
இலங்கை கடற்படையின் தேவைக்காக, வெளிநாட்டு கப்பல்கட்டும் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது கப்பல் இதுவாகும்.
அதேபோல, இந்தியாவால், வெளிநாட்டுப் படைக்காகத் தயாரிக்கப்பட்ட மிகவும் விசாலமான யுத்தக் கப்பல் இதுவாகும் என்றும் கூறப்படுகிறது. 
இந்தக் கப்பல், ஜூலை மாதம் 28ஆம் திகதியன்று, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பல், இலங்கை கடல் எல்லைக்குள், கண்காணிப்பு ரோந்து, தேடுதல் நடவடிக்கை, மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த பதிலளிப்பு நடவடிக்கைகள், கடல் ஊழல் தடுப்பு நடவடிக்கைள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும். 105.7 மீற்றர் நீளமான இந்தக் கப்பல், 13.6 மீற்றர் அகலமானது. இந்தக் கப்பல், மணித்தியாலத்துக்கு ஆகக் கூடிய வேகமான 24 கடல்மைல் வேகத்தில் பயணிக்கும். 2,350 டொன் கொள்ளளவை கொண்ட இந்தக் கப்பலில், 18 அதிகாரிகளும் கடற்பணியாளர்கள் 100 பேரும் பயணியாற்றமுடியும். 
தீயணைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகளும்,இந்தக் கப்பலில் இருக்கின்றன. அதுமட்டுமன்றி, சிறிய ரக ஹெலிகொப்டர்களை இறக்குவதற்கான இறங்குதள வசதிகளும் இந்தக் கப்பலில் உள்ளமை விசேட அம்சமாகும்.  
Previous Post Next Post