Top News

கொழும்பு குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை - ரிஷாத்

கொழும்புக்  குப்­பை­களை புத்­தளம் அரு­வக்­காட்டுப் பிர­தே­சத்தில் கொட்­டு­வ­தற்கு அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டி­கை­க­ளுக்கு எமது கட்சி ஒரு­போதும் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

புத்­தளம் நகர இளை­ஞர்­க­ளுக்கும்  அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்பு  புத்­த­ளத்தில் இடம்­பெற்­ற­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது,
கொழும்பில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை ரயில் மூலம் கொண்டு வந்து புத்­தளம் அரு­வக்­காட்டு பிர­தே­சத்தில் கொட்­டு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்தத் திட்டம் தொடர்பில் அமைச்­ச­ர­வை­யிலும்  கலந்­து­ரை­யா­டப்­பட்ட போது  எனக்கும் அமைச்சர் சம்­பிக்­க­வுக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. நாங்கள் இரு­வரும் முரண்­பட்­டுக்­கொண்டோம்.

இதன்­போது  அமைச்சர் கபீர் ஹாசிம் உள்­ளிட்ட அமைச்­சர்­களும்  என்­னோடு சேர்ந்து குரல் கொடுத்­தனர். இத்­திட்­டத்தை புத்­த­ளத்தில் நடை­மு­றைப்­ப­டுத்த எமது கட்சி முழு எதிர்ப்பைத் தெரி­விப்­ப­தா­கவும் உறு­தி­யாக கூறினேன்.

இதற்கு புத்­தளம் மாவட்ட அபி­வி­ருத்திக் குழு கூட்­டத்தில் அனு­ம­தியைப் பெற்று திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த போவ­தாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இதன்­போது கூறினார்.

புத்­தளம் பெரிய பள்­ளி­வாசல்  ஜம்­இய்­யதுல் உலமா சபையின் புத்­தளம் கிளை உள்ளிட்ட சிவில் அமைப்­பு­கள், இளைஞர் அமைப்புகள் ஆகியோருடன் பேசி அவர்களுடைய விருப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினேன் என்றும் தெரிவித்தார்.
(முஹம்மட் ரிபாக்)
Previous Post Next Post