எஸ்.எம்.சன்சிர் (பணிப்பாளர் )
பிரதேச மக்கள் கோரிக்கை
ஏதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தோர்தலுக்கிடையில் புதிய நல்லாட்சிக்கான அரசாங்கம் நின்டகாலமாக அடிப்படை வசதிகளற்ற நிலையிருக்கும் இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுமார் 18,000 ஆயிரம் மக்கள் வாழும் இறக்காமம் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான பௌதிய வளங்கள், அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேற்றுப் பிரிவு, வைத்தியர் விடுதி என்பன இல்லாதிருப்பதுடன் வாராந்தம் மற்றும் மாதாந்தம் நடைபெறும் கிளினிக் சேவைக்கான மாத்திரைகளையும் பெற்று கொள்ள முடியாதுள்ளது.
இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.
இதற்கு முதற்கட்டப் பணியாக இவ்வைத்தியசாலை தரம் உயர்த்தப்படுவதன் மூலமே மக்களுக்கு இதன் உச்சப்பயனை மக்களுக்கு வழங்க முடியுமென வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது. எனவே எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கிடையில் மிக அவசரமாக குறிப்பிட்ட பணிகளை முன்னெடுக்குமாறு இறக்காமம் பிரதேச அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுப்பதுடன் சம்ந்தப்பட்ட அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் தொடர்ந்தும் தட்டிக்கழிக்கப்படும் பட்சத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிலுகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் இறக்காமம் பிரதேச மக்கள் எச்சரித்துள்ளனர்.
சிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலயம்