வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (10) இடம்பெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்புணர் விமல் வீரவன்ச இது தொடர்பில் வினவிய போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாட வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், பாராளுமன்ற நிகழ்ச்சி அவ்வாறான ஒரு விடயம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.