Top News

காணாமல் போனவர்களை மீளப்பெற்றுத்தரவும்


காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீளக் கிடைக்க வேண்டுமென, வலியுறுத்தி, மட்டக்களப்பு நகரில் சுடரேற்றி ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு நகரின் காந்திப் பூங்காவுக்கு முன்னால் இன்று ​(30) ஒன்று திரண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீளக் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெருமளவிளானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் (இன்று) காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் அன்புக்குரியவர்களின் உண்மை நிலைமை கண்டறிவதற்கான பயணமாக இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களைத் தாங்கி மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட இவர்கள், காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி மற்றும் இழப்பீடு வழங்குவதுடன், இவ்வாறான காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துமாறும் வலயுறுத்தினர்.
காணாமல் ஆக்கப்படுத்தலுடன் தொடர்புடைய படைத்தரப்பினர், பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள் பணி நீக்கம் செய்தல் மற்றும் அதிகாரங்களைக் குறைத்தல் கொடுப்பனவுகளை இரத்துச் செய்தல் போன்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டுமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன் போது வலியுறுத்தினர்.
வடக்கு, கிழக்கில் இராணுவ  மயமாக்களை முடிவுக்கு கொண்டு வந்து, சிவில் வாழக்கையை மீளக் கட்டியெழுப்புமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கான மகஜரை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்கள் கையளித்தனர்.
Previous Post Next Post