எஸ்.என்.எஸ்.றிஸ்லி சம்சாட்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தினதும் நடமாடும் சேவை அட்டாளைச்சேனை செயலகத்தில் நடந்தேறியது ’’ஸ்ரமிக சுரெகும'' வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்களின் பிள்ளைகள் அவர்கள் குடும்ப அங்கத்தவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இலங்கை வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து மாண்புமிகு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களினது பங்குபற்றுதலுடன் பிரதேச செயலாளார் ரீ.ஜே.அதிசயராஜ் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று 27.08.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வைபரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்நிகழ்வின் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், அன்வர் உள்ளிட்ட அதிதிகளும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தின் உயரதிகாரிகளும் , அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந் நடமாடும் சேவையின் போது வருகை தந்திருந்தனர். இப்பிரதேச பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இதன் போது தீர்வு வழங்கப்பட்டது.