இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பலத்த முயற்சியின் பலனாக அமைச்சரவை அலுத்கமைகலவரத்துக்கு இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்ததற்கு தான் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும்அதேவேளை விரைவில் முறையான நீதி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சமூகத்திற்குஇணங்காட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இவ்வரசானது எங்கள் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அலுத்கமை கலவரத்தின் போதுபாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளாவது வழங்கவில்லையே என்ற விடயம் என்னிடம் பல தடவைகள் எமதுமுஸ்லிம் சகோதர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
தற்போது இழப்பீடுகளை வழங்க அமைச்சரவை சம்மதம் தெரிவித்ததன் மூலம் பலநாட்களாக எமதுமுஸ்லிம் சகோதரர்களின் மனதை கவலை கொள்ளச் செய்திருந்த விடயம் நிறைவுக்கு வந்துள்ளது. இம்முயற்சியில் அதிக ஈடுபாடு காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு, விசேடமாக நன்றிதெரிவிக்கிறோம்.
தேர்தல் நெருங்கும் வேளையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இரையை போட்டு மீனைபிடித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எப்போது எதனை செய்ய வேண்டுமென நன்குதெரிந்தவர்.எங்களுடைய ஆட்சிக் காலத்தில் எத்தனையோ விடயங்களை சாதித்தவர்.இதனைமறுத்திருந்தால் கிழக்கு மாகாண சபை தேர்தலில் இவ்வரசினரால் செல்ல முடியாத நிலைஏற்பட்டிருக்கும்.தேர்தலை நோக்காக கொண்டோ அல்லது வேறு காரணங்களை கருத்தில் கொண்டோஇவ்விடயம் நிறைவுற்றமை மகிழ்ச்சியான விடயம்.
இவ் அரசாங்கம் அமைதலின் பின்னால் அலுத்கமை கலவரத்தின் பங்களிப்பு அளப்பரியது. எதிர்வரும் கிழக்குமாகாண சபைத் தேர்தலில் இதை பேச ஏதாவது செய்திருக்க வேண்டும். அலுத்கமை கலவரத்துக்கு இழப்பீடுவழங்கல் அதற்கான தீர்வின் ஆகவும் குறைந்த தீர்வாகும். இக் கலவரத்தின் பின்னால் உள்ள சூத்திரதாரிகள்கைது செய்யப்படுவதே உண்மையான தீர்வாகும். இதனை இவ்வரசு செய்ய வேண்டும். அநியாயமாக இதன் மீதான பழியை நாம் சுமந்துகொண்டிருக்கின்றோம் என அவரது ஊடக அறிக்கையில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.